Saturday, November 27, 2010

ஏன் மறுக்கிறாய்.....

தாலாட்டிடும் தாயாய் இருந்திடுவாய் என்றிருந்தேன்...
தீ மூட்டும் தீ குச்சியாய் மாறி போனாயே....

நீ வந்திடுவாய் எனை தேற்றிடுவாய் என்றிருந்தேன்...
கருவை அளித்த தாய் வர மாட்டாள் என்பதை உணர்த்தினாய்.....

பூக்கும் பூக்கள் வாடி தான் போகும்...
ஒரு நாள் நானும் மண்ணோடு சாயத்தான் போகிறேன் ....

அப்போது வருவாயா எனை பிணமாய்
பார்தாவது உன் காதலை சொல்வாயா???

உன்னிடமிருந்து நான் கேட்பது
பணமோ பதவியோ அல்ல........

என் கல்லறையின் மேல்
உன் கையில் தவழ்ந்து வந்திடும் ஒரு
ஒற்றை மஞ்சள் ரோஜா தா

Friday, November 12, 2010

சொல்லாத காதல்.....

உன் விழியில் என் உருவம் பார்த்து விட்டு...அன்பே ஏன் தயங்குகிறாய் உன் காதலை சொல்லிவிடு........காரணம்........
மறைக்கின்ற காதல் மலராது.....
சொல்லாத காதல் என்றும் வாழாது......

Tuesday, November 2, 2010

நட்பு.........

காதலும் நட்பும் இரு கவிதைகள்....
அன்பான நட்பை நேசிக்கிறேன்....
நேசிக்கும் நட்பைக் காதலிக்கிறேன்.....
நட்பு உன் மீது....காதல் உன் நட்பின் மீது.........

Monday, November 1, 2010

என்னுள் நுழைந்தாய்......

சத்தமில்லாமல் என்னுள் நுழைந்துவிட்டாய்...
என் இதயத்துடிப்பை நிறுத்திவிட்டுப் போகிறாய் மறுபடியும்...ஆனால்
உனக்காகக் காத்திருப்பேன் என் இதயம் துடிக்க காலமெல்லாம்.....

Wednesday, October 20, 2010

காதல்...........

காதல் வந்து சுவாசம் தந்தால் மண்ணுக்கும் உயிர் வருமே….
நம் கண்கள் இரண்டும் பேசிக் கொண்டால் உலகத்தின் மொழி எல்லாம் தோற்றிடுமே…

Saturday, October 9, 2010

நண்பனே....

"பூவாக இருக்கும் என் பாசத்தை நம்ப மறுக்கிறது நான் நண்பனே நீயே என்னை வெறுக்கும் போது
இந்த உயிர் இருந்து மட்டும் பலன் என்ன ஏற்றுக்கொள் இறைவா இந்த பாவப்பட்ட உயிரை உன் காலடில் நிம்மதியாக உறங்குகிறேன்!!!!!!!!!!"

Wednesday, September 29, 2010

நீயாக வேண்டும்....

உன் நிழலாய் மாறி,
உன்னை பின் தொடர வேண்டும்
உன் ஆடையாய் மாறி,
உன் அழகாய் பாதுகாக்க வேண்டும்
உன் கண்ணீராய் மாறி,
உனக்காக அழ வேண்டும்
உன் புன்னகையாய் மாறி,
உன் சந்தோசத்தை வெளிபடுத்த வேண்டும்
நான்நீயாய் மாறி,
நான் நீயாக வாழ வேண்டும்..
தென்றலாய் மாறி,
உன்னை கட்டி அணைக்க வேண்டும்...
மழையாய் மாறி,
உன் உடலுக்குள் புக வேண்டும்
உன் நிழலாய் மாறி,
உன்னை பின் தொடர வேண்டும்.....

Wednesday, September 15, 2010

இதயத்தின் இடைவேளி.....


இதயம் கூட இடைவேளி விட்டுதான் துடிக்கும்
அந்த இடைவேளி கூட உன்னை பற்றிதான் நினைக்கும்……..

Sunday, September 12, 2010

மொழி....

இரு இதயம் மட்டும் பேசுகின்ற
கடவுள் தந்த அன்பு மொழி
ஒன்றை ஒன்று விட்டகலா
ஈர் உயிர்கள் சேர்ந்து கட்டுகின்ற
அன்பு என்னும் ஆலயத்தின்
அர்ச்சனை மந்திரம் காதல் மொழி
எத்தனை ஆண்டு, எத்தனை தூரம்
எத்தனை ஜென்மம் பிரிந்திருந்தும்
அத்தனை நாளும் என்னிதயம்
உன்னை நினைத்துக் கவிபாடும்
அன்பில் பிறந்த நட்பு இது
பண்பில் வளர்ந்த காதல் இது
எத்தனை தடைகள் வந்தாலும்
தூள் தூளாக உடைத்தெறியும்....

Friday, September 3, 2010

தோல்வி....

தோல்வி எனக்கு புதிதல்ல
அதனாலதான் அவளை மறக்க வேண்டும்
என்று நினைக்கும் போது
கூட
என் மனதோடு போராடி தோற்று போகிறேன்"......

Tuesday, August 31, 2010

மௌனம்....


என் மௌனம் ஆயிரம் மொழி பேசும்…
அது புரிந்தவர்களுக்கு மொழி புரியாதவர்களுக்கு வலி……

Saturday, August 28, 2010

ரசிகன்.....

என் முதல் ரசிகன் நீ...

பெருமிதம் கொள்ள கூட நெஞ்சு மறுக்கிறது..
காரணம்...
...என் கிறுக்கல்கள் கூட உனக்கு கவிதையாக தெரிந்து இருக்கிறது...

Friday, August 27, 2010

இதயம்....


நனைய மறந்த மழைத்துளி ..
கோர்க்க முடியாத பனித்துளி ..
சேர்க்க முடியாத மழலை சிரிப்பு .
பார்க்க முடியாத மொட்டுவிழும் பொழுது..
கைக்குள் அகப்படாத தென்றல் காற்று ..

எல்லாவற்றிற்கும் மேலாக
வெல்ல முடியாத உன் இதயம் ..
எப்போதும் வெற்றிடமாய் நான்..

Thursday, August 26, 2010

முத்தம்.....

முத்தம் என் காதலை முத்தமாய் உன்னிடம் சொல்வேனடா.... என் காதலின் ஆழத்தை அந்த முத்தத்தில் சொல்வேனடா....

தொலைப்பேசி.........


உன் அழைப்புக்காக ஏங்கி...
கதறி கதறி அழுகிறது என் தொலைபேசி கூட....
கலங்கி நிற்கும் மனதையும்....
கண்ணீர் விடும் கண்களையும் தவிர...
அதற்கு பதில் சொல்ல வேறு உறுப்புகள் இல்லை.............

Wednesday, August 25, 2010

அன்பே....நீயிருந்தால் ....

"அன்பே..! ஆறுதல் கூற நீயிருந்தால்
நான் அழுது கொண்டேயிருப்பேன்!
தலைக்கோதி உச்சந்தலை முத்தமிட நீயிருந்தால்
துன்பத்தில் வாடிக்கொண்டேயிருப்பேன்!
தாலாட்டில் தாயாய் தனிமையில் கணிகையாய் தடியூன்றுகையில் சேவகியாய்
 நீயிருந்தால் ........
பிறந்து,பிறந்து மரணத்தை முத்தமிடுவேன்!"

தவமும் வரமும் ........

உன்னுடன்
வாழ்வதற்கும் ,
உன் நினைவுகளுடன் வாழ்வதற்கும்,
ஒரு-சிறு வித்தியாசம் தான்...,
உன்னுடன் வாழ்வது --"வரம்"
உன் நினைவுகளுடன் வாழ்வது--"தவம்"
என்றும் உன் நினைவுகளுடன் நான்...........